மெட்டா AI-யில் புதிய மாற்றம்
இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய தளங்களில் சிறார்கள் செயற்கை நுண்ணறிவுடன் (AI) மேற்கொள்ளும் உரையாடல்களைப் பெற்றோர்கள் கண்காணிப்பதற்கான புதிய வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, கடந்த ஏழு நாட்களில் தங்கள் குழந்தைகள் மெட்டா ஏஐயுடன் எத்தகைய தலைப்புகளில் உரையாடினார்கள் என்பதை 'Insights' எனும் பகுதியில் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்த வசதியில் உரையாடலின் முழுமையான விபரங்கள் பகிரப்படாது மாறாக, பொழுதுபோக்கு, பயணம், உடல்நலம் போன்ற பொதுவான தலைப்புகள் மட்டுமே காட்டப்படும்.
தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி, விரைவில் இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன் மூலம் சிறார்கள் பாதுகாப்பான முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும் என மெட்டா தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment